Welcome to Jettamil

20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம் மீட்பு!

Share

20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம் மீட்பு!

யட்டியந்தோட்ட பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போயிருந்த 7 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் சடலம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14, 2025) மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி மதியம் யட்டியந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவயில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த சிறுமி மண்ணுக்குள் புதையுண்டிருந்தார்.

பெரன்னாவ மகா வித்தியாலயத்தில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயிலும் நேதுகி சஹான்யா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்னவத்தையிலிருந்து பத்தனேகல வரையிலான வீதியைச் சுத்தம் செய்யும் பணியின் போது, அருகில் ஒரு நாய் மண்ணைத் தோண்டுவதைக் கவனித்த மீட்புக் குழுவினர், சோதனையிட்டபோது, ​​கித்துள் மரத்தின் கிளைகளுக்கு அடியில் புதையுண்டிருந்த சிறுமியின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த சிறுமி சுமார் 20 நாட்களாக மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலச்சரிவில் சிறுமியின் தாய், தந்தை, தம்பி மற்றும் பாட்டி ஆகியோரும் ஏற்கெனவே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுமியின் தாயின் உடல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுமி நேதுகி சஹான்யாவின் சடலம் மேலதிகப் பிரேத பரிசோதனைக்காக கருவனெல்ல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக யட்டியந்தோட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை