Welcome to Jettamil

நிதியமைச்சவைப் பதவியில் இருந்து நீக்கினார் பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்

Share

பிரிட்டன் நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை (Kwasi Kwarteng)  பிரதமர் லிஸ் டிரஸ் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

பிரிட்டன் புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார்.

கடந்த மாதம் வரவுசெலவுத் திட்டத்தில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது.

பிரதமரின் இந்த திட்டத்திற்கு சொந்த கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் தனது அமைச்சரவையில் இருந்து நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடியாக நீக்கியுள்ளார்.

பிரிட்டனின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹண்ட் (Jeremy Hunt) நாட்டின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை