Welcome to Jettamil

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நாடு ஏற்படும் ஆபத்து

Share

நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு நாடு ஏற்படும்  ஆபத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிட்ரோ நிறுவனத்தினால் உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயுவின் தற்போதைய கையிருப்பு சுமார் நான்கு மாதங்களில் முற்றிலும் தீர்ந்து விடும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், கையிருப்பு முடிந்தவுடன் நுகர்வோர் மற்றொரு எரிவாயு பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.

அவ்வாறான நிலை ஏற்பட்டால், பொதுமக்களின் அன்றாட தேவைகள் முற்றிலுமாக சீர்குலைந்து, சுற்றுலாத்துறை முதல் இறந்தவர்களை தகனம் செய்வது வரை – எல்லா மட்டங்களிலும் பாதிப்பு ஏற்படும்.

அண்மையில் ஏற்பட்ட எரிவாயு பற்றாக்குறையால், நாட்டு மக்கள் நீண்ட வரிசைகளில் நாட்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதுடன், நாட்டிற்கு பொருளாதார மற்றும் சமூகப் பின்னடைவையும் ஏற்படுத்தியது. அத்துடன், அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கும் வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை