பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் இருக்கைகள் உடைந்த நிலை – நோயாளிகள் விசனம்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் இருக்கைகள் உடைந்த நிலையில் காணப்படுவதாக நோயாளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பல நாட்களாக குறித்த இருக்கைகள் சரி செய்யப்படாமல் உடைந்த நிலையில் காணப்படுவதால் மருத்துவம் பெற வரும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாவதை அவதானிக்க முடிகின்றது.
அதிகளவானோர் இருக்கைகள் இன்றி எழுந்து நின்று பல மணி நேரம் காத்திருந்து மருத்துவ தேவைகளை நிறைவேற்றிச் செல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பல நாட்களாக கேட்பாரற்று உடைந்த நிலையில் காணப்படும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் இருக்கைகளை சீர் செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









