பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து கட்டணம் 2.23% குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயில் இருந்து 38 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மற்றைய கட்டணங்கள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் 2.23% குறைக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.