கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கடந்த அரசாங்கம் நாட்டில் நிலவி வந்த நிதி நெருக்கடி நிலைமைகளை மூடி மறைத்ததாக சீ.என்.என். செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார, நிதி நெருக்கடி நிலைமைகளை அரசாங்கம் மக்களிடமிருந்து மறைத்து விட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு வங்குரோத்து அடைந்து விட்டது என்பதனையும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தேவை என்பதனையும் கடந்த அரசாங்கம் வெளிப்படுத்த தவறியது எனக் குறிப்பிட்டுள்ளார்.