வெற்றிலைக் கேணியில் இன்று நாள் தொழில் ஆரம்பம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் இந்த வருடத்திற்கான நாள் தொழில் இன்று ஆரம்பமாகியது.
வருட திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட பர்னாந்து ஜெயசீலன் என்பவர் பங்கு மக்கள் சார்பாக இன்று நாள் தொழிலை கடலில் ஆரம்பி்த்தார்.
குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார்,
புனித அந்தோனியார் கடற்றொழிளாளர் சங்க நிர்வாக உறுப்பினர்கள், சங்க அங்கத்தவர்கள், தொழிலாளர்கள் பங்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.