இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ட்விட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை 2021 ஆம் ஆண்டின் நிறைவு வரை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.