வடகொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாக வட ஜப்பானில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொக்கைடோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஜப்பானிய அதிகாரிகள் நேற்று காலை சைரன் ஒலி எழுப்பி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்தது மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அதிகாரிகள் தெரிவித்தபடி, வடகொரியாவால் சோதனை செய்யப்பட்ட ஏவுகணை ஹொக்கைடோ உட்பட வடக்கு ஜப்பானை அடையவில்லை.
வடகொரியாவின் கிழக்குக் கடலில் ஏவுகணை விழுந்ததை ஜப்பான் கடலோர காவல்படை உறுதி செய்துள்ளது.
வடகொரியா இந்த ஆண்டில் மட்டும் 27 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.