100 KG இற்கு அதிகமான போதைப்பொருள் தயாரிப்பதற்கான இரசாயனம் கண்டுபிடிப்பு
கந்தானை ரயில்நிலைய வீதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள காணி ஒன்றிலிருந்து ஐஸ் போதை பொருளை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது இரண்டு மாடி வீடு கொண்ட காணியாகும். தோட்டத்தில் உள்ள பூச் செடிகளுக்கு இடையில் குறித்த ரசாயன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த ரசாயன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.
கந்தாணை போலீஸ் விசட அதிரடிப்படை எஸ்ஓசி உத்தியோகத்தர்கள் வீடு மற்றும் அதனை அன்மித்த பகுதிகளில் இன்று காலை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது வீட்டுக்கு அருகில் உள்ள சேற்று நிலத்தில் மேலும் சில ரசாயன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.
சுற்றிவழைப்பில் மாத்திரம் 100 கிலோகிராம் ரசாயன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் பெக்கோ சமனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த காணியில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் என்ற போதை பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் ரசாயன பொருட்கள் தொகை நேற்றிரவு மித்தனிய பொலீசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.





