இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும், தொடர்புகளால் சீனா சந்தேகமடைந்துள்ளதாகவும், இதனால் தனது திட்டங்கள் குறித்த மதிப்பீடு செய்வதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொண்டிருக்கும் உடன்பாடுகளாலும், பேணிவரும் தொடர்புகளாலும் சீனா சந்தேகம் அடைந்துள்ளது.
இதனால் இலங்கையில் கடந்த 10 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக, ஆராய்ந்து,
அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக சீனத் தூதரகத்தின் கீழ் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
எனவே வருங்காலங்களில் சீனா இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.