டுபாயில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான, ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வந்தது.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மழைக்காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் எடுத்தது.
சதிஷா ராஜபக்ச 14, ரவீன் டி சில்வா 15, யாசிரு ரோட்ரிகோ 19, மதீஷா பத்திரன 14 ஓட்டங்களை எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் விக்கி ஆஸ்ட்வாய் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, இந்திய அணி 32 ஓவரில் 104 ஓட்டங்கள் பெற வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா 21.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவான்ஷி ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களும், ஷெய்க் ரஷீத் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.