சீன வெளியுறவு அமைச்சர் நாளை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் .
நாட்டில் தற்போது இந்தியா,சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் ,சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன .அதன் பிரகாரம் அவர் நாளை இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பாா் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது.
குறித்த விஜயத்தின் போது சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவைத் ஆரம்பித்து வைக்கவுள்ளாா்.
புத்தாண்டில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.