Welcome to Jettamil

நிதி பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்லவுள்ள நகரசபை – ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றம்!

Share

நிதி பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்லவுள்ள நகரசபை – ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றம்!

பருத்தித்துறை நகரசபையினாரால் பணியாளருக்கு வழங்கப்படவேண்டும் என்ற 40 வீத சம்பள அதிகரிப்பானது நிதியின்மை காரணமாக வழங்க முடியாதுள்ளதாகவும் இதனால் நீதிமன்றை நாடுவதென்று தீரமானிக்கப்பட்டுள்ளது.

சபை அமர்வானது பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் இன்று காலை 9:15 மணியளவில் ஆரம்பமானது.

வீதிகளின் ஓரங்களை செப்பனிடுதல், வீதி விளக்குகளை விரைவாக பொருத்துதல், நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அறநெறி பாடசாலைகள் உருவாக்குவதை ஊக்கிவித்தல், இலங்கை போக்கு வரத்து சபைக்கு நவீன சந்தை தொகுதி அமைந்துள்ள பகுதியில் அலுவலகம் ஒன்றினை அமைத்துக் கொடுத்தல், வாடகை முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துதல், வரி அறவிடுதல், நவீன சந்தைப்பகுதியில் தனியார், அரச பேருநதுகளை தரிப்பிடம், போன்றவற்றை பருத்தித்துறை போலீசார் கண்காணித்தல், சபை தீர்மானங்களை ஒழுங்கமைத்தல், நவீன சந்தை பகுதியின் மேல் பகுதி மழை நீர் ஒழுக்கு ஏற்படுவதாகவும் அதனை நிரந்தர தீர்வாக எட்டுவதற்குரிய நடவடிக்கை எடுத்தல் என்பன தொடர்பாக இன்றைய அமர்வில் கலந்துரையாடப்பட்டது.

ஊழியர்களுக்கான 40 வீதமான கொடுப்பனவு அதிகரிப்பானது வழங்கவேண்டும் என்று வழங்கப்பட்ட சுற்றுநிருபம் தொடர்பாக ஆராயப்பட்டு, அதனை வழங்குவதற்குரிய நிதி சபையிடம் இல்லை என்றும் இதனால் மத்திய அரசின் சுற்றுநிருபத்தை மன்றினூடாக ரிட் சவாலுக்கு உட்படுத்துவதென்றும் ஆராயப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை