2020ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் இலங்கையில் கோவிட் தொற்று பரவியதை தொடர்ந்து, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அடுத்த வருடம் இறுதி வரை தடை தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதி தடையினால் சிறிய ட்ரக்டர்கள் மற்றும் லொறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக, குறைந்த விலையிலாவது வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அந்த சங்கம் தெரிவித்துள்ளது.