உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது.
அதனடிப்படையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது.இதன் காரணமாக மசகு எண்ணெய் இறக்குமதியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
இலங்கையில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வரிசையில் நின்றும் , ஏமாறும் நிலை பரவலாக அவதானிக்க முடிகின்றது.அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்னர் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தது .
இந்த நிலையில் மசகு எண்ணெய்யின் அதிகரிப்பு இலங்கை மக்கள் மத்தியில் மீண்டும் எரிபொருள் ஏற்றத்தை நாடு சந்திக்குமா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
வளர்ந்துவரும் நாடுகளுக்கு மசகு எண்ணெய் விலை உயர்வானது, பொருளாதாரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
ரஷ்யா – யுக்ரைன் போர் நெருக்கடியால் மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் .