2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் 198 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 148 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்ச்செல்வன் கஜலக்ஷன் என்ற மாணவர், 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்றிரவு வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், யாழ். புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 151 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் இருந்து 227 பேர் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அவர்களில் சுதர்சன் அட்சரன் என்ற மாணவர் 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.