நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், இன்று பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்குச் சட்டம், நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் எனவும், ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று 7 மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.
இதனிடையே இன்று ஊரடங்குச் சட்டம் குறிப்பிட்ட நேரத்துக்கு தளர்த்தப்ப்படுவதால், இன்று 5 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏ முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும் மாலை 6 மணிமுதல் இரவு 11.30 மணிவரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஊரடங்கு முற்றாக நீக்கப்பட்டால், ஏழரை மணிநேரத்துக்கும் அதிகமான மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.