Welcome to Jettamil

பிறந்தநாள் கேக்கில் இறந்து கிடந்த பல்லி! – 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Share

பிறந்தநாள் கேக்கில் இறந்து கிடந்த பல்லி! – 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாங்கப்பட்ட ஐசிங் கேக்கில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தமையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டதுடன், குறித்த கேக்கைச் சாப்பிட்ட 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் (ஒக்டோபர் 26) பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, மஸ்கெலியா நகரிலுள்ள ஒரு வெதுப்பகத்திலிருந்து (டீயமநசல) ஐசிங் கேக் ஒன்று வாங்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் நிகழ்வில் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்ட நிலையில், பின்னர் மீதமிருந்த கேக்கைப் பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது.

இதனால், குறித்த கேக்கைச் சாப்பிட்ட 5 வயது பெண் பிள்ளையும், 3 வயதான ஆண் குழந்தையும் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவதானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொதுச் சுகாதார அதிகாரிகள் உரிய வெதுப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை