Welcome to Jettamil

சனத் நிஷாந்தவின் மரணம் மிகப்பெரிய இழப்பு – மகிந்த ராஜபக்ச

Share

சனத் நிஷாந்தவின் மரணம் மிகப்பெரிய இழப்பு – மகிந்த ராஜபக்ச

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் என்பது மிகப்பெரிய இழப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சனத் நிஷந்தவின் வீட்டிற்கு சென்ற மகிந்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனைத்த நடவடிக்கைளிலும் துணையிருந்தார்.

கட்சி நடவடிக்கைகள் மாகாண சபை நடவடிக்கை உள்ளிட்ட அனைத்திலும் முன்னின்று செயற்பட்டார்.

அவரது இழப்பு எங்கள் கட்சிக்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் மிப்பெரிய இழப்பாகும். அவர் தனது மாகாணத்திற்காக மட்டும் செயற்படவில்லை. முழு நாட்டிற்காகவும் சேவை செய்தார்.

ஒரு இடத்திற்குள் மட்டுப்பட்ட சேவையை வழங்கவில்லை. கட்சியில் ஒரு தலைமைத்துவத்தை இழப்பதென்பது இலகுவான விடயமல்ல. அவர் மிகப்பெரிய சக்தியாக இருந்தார்” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை