சீன உரக்கப்பல் தொடர்பான பிரச்சினையை இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை சேதப்படுத்தாத வகையில் கையாள்வதற்கான செயல்முறையொன்றை தயாரிப்பதற்கு வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் சீனாவின் Qingdao Seawin Biotech நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு கணக்காய்வாளர் நாயகம் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருந்தார்.
கரிம உரம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்வின்படி குறித்த நிறுவனம் செயற்படாதமையே அதற்குக் காரணம்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோருடன் மேலும் கலந்துரையாடுவதற்கு தயார் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.