யாழ். பண்ணை சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி பலகையில் யாழ்ப்பாண பொலிசார் யாழ் நீதிமன்ற அறிவித்தலை ஒட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ். பண்ணைச் சுற்று வட்டத்தில் திடீரென தோன்றிய நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
நீதிமன்றம் அதனை வைத்தவர்களை எதிர்வரும் 18 ஆம் தேதிக்கு முன்னர் உரிமை கோருமாறு அறிவித்தல் விடுத்தது.
நீதிமன்ற அறிவித்தலை குறித்த இடத்தில் காட்சிப்படுத்திய யாழ்ப்பாணப் பொலிஸார் வீதி வழிகாட்டி பலகையில் ஒட்டியது மட்டுமல்லாது குறியீட்டை மறைத்து ஒட்டியமையும் காணக் கூடியதாக உள்ளது.