டெங்கு நோய் தொற்று மிகவும் வேகமாக பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் உடலியல் தொடர்பான விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
கம்பஹா, திருகோணமலை, மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், 30 ஆயிரத்து 365 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 14,935 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்தநிலையில், டெங்கு நோய்த் தொற்று மிகவும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் உடலியல் தொடர்பான விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.