Welcome to Jettamil

ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது

Share

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்  இதனைக் கூறியுள்ளார். “தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் ராஜபக்ச தரப்பினரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்து வருகிறார்.

இலங்கை மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ளமைக்கு, ஜனாதிபதி  உள்ளிட்ட அவரது ஆட்சியை பாதுகாக்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை