தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற அரசியல் நிலைமைகள் தொடர்பான அரசியல் தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் வலி. தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சண்டிலிப்பாயில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டு சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக விளக்கங்களை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் வலி. தென் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.