நாடளாவிய ரீதியில் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த சமுர்த்தி வங்கியின் 805 இலட்சம் ரூபாவை செலவிட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமுர்த்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் வேளையில் இவ்வாறு வருடத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 15ஆம் திகதி சமுர்த்தி வங்கிகள் மூடப்பட்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.