Jet tamil
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேஸ்புக் நிறுவனம் இலங்கை மீது அதிருப்தி

பேஸ்புக் நிறுவனம் இலங்கை மீது அதிருப்தி

இலங்கையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. பல தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சுதந்திரமான கருத்துரிமைக்கும் புத்தாக்கத்துக்கும், தனியுரிமைக்கு இந்தச் சட்டம் இடையூறாக இருக்கும் என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது.

இச் சட்டம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் உருவாக்கப் பணியில் சமூக ஆர்வலர்கள் அல்லது துறைசார் நிறுவனங்கள் மற்றும் பிரிதிநிதிகளின் பங்களிப்பு உருவாங்கப்படவில்லை.

70 வீதத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இந்த சட்டம் பற்றி அறிந்திருக்கவில்லை. கூகுள், மெட்டா போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு, இந்த சட்டம் அமுல்படுத்த முடியாத ஒரும் சட்டம் எனக் கூறியுள்ளன.

இணைய குற்றங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்தச் சட்டத்தின் நோக்கம், ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரான படையெடுப்பாகவே கருத முடியும்.‘‘ என அவர் மேலும் கூறினார்.

Related posts

எரிபொருள் விலை குறித்து வெளியான தகவல்

Sinthu

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

Leave a Comment