Welcome to Jettamil

உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதியின் மே தினப் பரிசு!

Share

உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதியின் மே தினப் பரிசு!

ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்க தருணத்தில், உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது மே தின வாழ்த்துச் செய்தியில் பல இனிப்பான செய்திகளை வழங்கியுள்ளார்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், 2016 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் பணியில் இணைந்த அரச ஊழியர்களுக்கும் மீண்டும் ஓய்வூதிய உரிமை வழங்கப்படும் என்ற பாரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது பல்லாயிரக்கணக்கான இளம் அரச ஊழியர்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கியுள்ளது.

அண்மைய ‘டித்வா’ புயல் மற்றும் சர்வதேசப் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், 1977-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிகக்குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை நாடு பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபாய் சம்பள உயர்வு, ‘மஹபொல’ கொடுப்பனவு 10,000 ரூபாயாக அதிகரிப்பு எனப் பல சலுகைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கை அடைய உழைக்கும் மக்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்க அரசுடன் இணைய வேண்டும் என ஜனாதிபதி தனது மே தின செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை