Welcome to Jettamil

இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் பாரிய கச்சா எண்ணெய் கப்பல் – ஏப்ரல் மாதத்தில் தடையின்றி எரிபொருள் விநியோகம்

Share

இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் பாரிய கச்சா எண்ணெய் கப்பல் – ஏப்ரல் மாதத்தில் தடையின்றி எரிபொருள் விநியோகம்

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இலங்கைக்கு வருகை தரும் இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளது.

இத்தகவலை இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் (CPSTL) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் கப்பல் மூலம் சுமார் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இலங்கைக்குக் கொண்டு வரப்படுவதாக அதன் மேலாண் பணிப்பாளர் கலாநிதி மயூரு நெத்திகுமார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் நிலவிய போதிலும், திட்டமிட்டபடி இந்தக் கப்பல் வருகை தருவது நாட்டின் மின்சார உற்பத்தி மற்றும் வாகனப் போக்குவரத்துத் துறைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

இன்று வருகை தரும் இந்தக் கப்பலுடன், ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு முழுமையாகப் பூர்த்தியடைந்துள்ளதாகவும் கலாநிதி மயூரு நெத்திகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் தட்டுப்பாடு இன்றி விநியோகத்தைச் சீராக முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை