அஜித்தின் 26-வது திருமண நாள் கொண்டாட்டம்! குடும்பத்துடன் கேக் வெட்டிய ‘தல’ – வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் என்பதைத் தாண்டி தற்போது முழுநேர கார் பந்தய வீரராக உருவெடுத்துள்ள அஜித் குமார், சமீபத்தில் சென்னை திரும்பித் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியிருந்தார்.
அடுத்த படத்திற்கான ஆயத்தப் பணிகளுக்கு இடையே, தற்போது தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில், அஜித் மற்றும் ஷாலினி தங்களது 26-வது திருமண நாளை மகிழ்ச்சியுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
இந்தப் புகைப்படங்களை நடிகை ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1999-ல் ‘அமர்க்களம்’ படத்தில் தொடங்கிய இவர்களது காதல் பயணம், இன்று வரை வெற்றிகரமாகத் தொடர்ந்து பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
எளிமையான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண நாள் கொண்டாட்டப் புகைப்படங்களைக் கண்ட ரசிகர்கள், இணையத்தில் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.





