திருமண விழாவிலிருந்து செல்லும் வழியில் பலியான சனத்: துயரில் புதுமண தம்பதியினர்
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த தொடர்பில் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (25) அதிகாலை திருமண நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பிய போதே விபத்து நிகழ்ந்து இராஜாங்க அமைச்சர் உயிரிழந்துள்ளார்.
சமூக ஊடக செயற்பட்டாளர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவலறிந்ததும் திருமணமான மணமகன் தனது முகப்புத்தக தளத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
“மாமா சனத் நிஷாந்தவுக்கு என்ன நடந்தது என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்றும், எனக்காக என்னை பார்க்க வந்த பயணத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பதனை நான் எப்படி தாங்கிக் கொள்வேன், ஆத்மா சாந்தி அடையட்டும் மாமா” என அவர் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.