700 மில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு அடுத்த வாரம் உலக வங்கி அங்கீகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த நிதிக்கான ஒப்புதல் உலக வங்கியின் அடுத்த பணிப்பாளா் சபை கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும் என்று அந்த செய்தியில் தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் எதிா்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது.