Welcome to Jettamil

11 வயதான சிறுமியிடம் மோசமாக நடத்துகொண்ட பொலிஸார்

Share

மத்தேகொட பொலிஸ் நிலைய பொலிஸார் குழு 11 வயது சிறுமியொருவரை கைது செய்து, அவரிடம் மோசமாக நடந்து கொண்ட சம்பவத்தினால் குறித்த பொலிஸ் குழுவொன்றிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளை மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினொரு வயதான சிறுமியொருவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்த பெறுமதியான தங்க நகையொன்று காணாமல் போயுள்ளது.

எனவே சிறுமி மற்றும் அயல்வீட்டில் வசித்த தம்பதியொருவரும் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உடல், உளரீதியாக வதைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் போலி முறைப்பாட்டின் பேரில் ஹொரணை நீதிமன்றத்திலும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை