மலேசியாவில் டொனால்ட் ட்ரம்பின் பாரம்பரிய நடனம் வைரல்!
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அங்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் பாரம்பரிய நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ஆசியச் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 26, 2025) கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் திரண்டு நின்று வரவேற்றனர்.
அப்போது, மலேசியாவின் பல்வேறு இன சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரம்பரிய நடனக் கலைஞர்கள் ‘ஹவாய் ஃபைவ்-ஓ’ போன்ற பாடல்களுக்கு நடனமாடி, ட்ரம்புக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.
சற்றும் எதிர்பாராதவிதமாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிவப்பு கம்பளத்திற்கு அருகில் சென்று, நடனக்குழுவினருடன் இணைந்து தனது அடையாள அசைவுகளைக் கைகளைக் கோர்த்தி ஆடியுள்ளார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமும் அவருடன் இணைந்து நடனமாடியது அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த உற்சாகமான வரவேற்பு மற்றும் ட்ரம்பின் spontaneous நடனம் தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. ஆசியான் மாநாடு மற்றும் பிராந்திய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துவதற்காக ட்ரம்ப் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.





