Welcome to Jettamil

யாழ். சுன்னாகத்தில் 2,400 மில்லிகிராம் ஹெரோயினுடன் வியாபாரி கைது!

Share

யாழ். சுன்னாகத்தில் 2,400 மில்லிகிராம் ஹெரோயினுடன் வியாபாரி கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று திங்கட்கிழமை (ஒக்டோபர் 27) அதிகாலை 33 வயதுடைய ஹெரோயின் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கையின்போது சந்தேகநபரிடமிருந்து 2,400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை