Welcome to Jettamil

நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாய் நன்கொடை: பிரதமரிடம் நிதியைக் கையளித்தார் சந்திரிகா!

Share

நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாய் நன்கொடை: பிரதமரிடம் நிதியைக் கையளித்தார் சந்திரிகா!

இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் (Bandaranaike National Memorial Foundation) சார்பில் 250 மில்லியன் ரூபாயை அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9, 2025) பிரதமர் அலுவலகத்தில் வைத்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இந்த நிதியை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிந்தும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பேரிடர் நிவாரணப் பணிகளுக்குப் பங்களிக்கும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை