Welcome to Jettamil

யாழில் போதையின் ஆட்டம்: சட்டவிரோதச் சொத்துக் குவிப்பில் திடீர் செல்வந்தர்கள் கைது !

Share

யாழில் போதையின் ஆட்டம்: சட்டவிரோதச் சொத்துக் குவிப்பில் திடீர் செல்வந்தர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உருவாகியுள்ள திடீர் செல்வந்தர்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இவர்கள் வன்முறைச் சம்பவங்களை ஒழுங்கமைத்தும், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டும், வட்டிக்குப் பணம் கொடுத்தும் சட்டத்துக்கு முரணான வகையில் சொத்துக்களைச் சேர்த்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணை மற்றும் வழக்குகள்:

முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றிலும், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.

இந்தச் சட்டவிரோதச் சொத்துக் குவிப்பைத் தடுக்கவும், போதைப்பொருள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் விசேட அதிரடிப் படையினர் (STF) களத்தில் குதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை