உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளும், பஞ்சாப்பில் 117 தொகுதிகளும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளும்,
மணிப்பூரில் 60 தொகுதிகளும் கோவாவில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடக்கவுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் வரும் பெப்ரவரி 10-ம் திகதி தொடங்கி மார்ச் 7-ம் திகதி வரை 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.
இங்கு பெப்ரவரி 10, 14, 20, 23, 27-ம் திகதிகளிலும், மார்ச் 3 மற்றும் 7-ம் திகதியும் தேர்தல் நடைபெறும்.
இரு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ள மணிப்பூரில் பெப்ரவரி 27- மற்றும் மார்ச் 3-ம் திகதிகளில் வாக்களிப்பு இடம்பெறும்.
உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக பெப்ரவரி 14-ம் திகதி தேர்தல் நடைபெறும்.
அனைத்து மாநிலங்களிலும் தேர்தல்கள் முடிந்தபின் மார்ச் 10-ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.