Welcome to Jettamil

கொழும்பை வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

Share

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நேற்றிரவு கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.

மாலைதீவில் இருந்து சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை,

அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் இராஜாங்க அமைச்சர் டிவி சானக ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

சீன வெளிவிவகார அமைச்சருடன் 18 பேர் கொண்ட குழுவொன்றும், கொழும்பு வந்துள்ளது.

இரண்டு நாட்கள் பயணமாக கொழும்பு வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

அத்துடன், சீன- இலங்கை இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்ட 65 ஆண்டு கொண்டாட்டங்களையும் அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கொழும்பு வந்து சேர்ந்த சீன வெளிவிவகார அமைச்சரை வரவேற்க வெளிவிவகார அமைச்சர் ஜிஎல். பீரிஸ் செல்லாதது ஏன் என்று, குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை