Welcome to Jettamil

கொழும்பு மக்களுக்கு அவசர அறிவிப்பு! கடும் வறட்சியால் நீர் விநியோகம் துண்டிப்பு

Share

கொழும்பு மக்களுக்கு அவசர அறிவிப்பு! கடும் வறட்சியால் நீர் விநியோகம் துண்டிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறண்ட வானிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரங்களான களட்டுவாவ மற்றும் லப்புகம நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பதுக்கா, ஹோமகம, பெலவத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சுழற்சி முறையில் நீர் விநியோகத்தை மேற்கொள்ளத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் விநியோகம் நிறுத்தப்படும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

புதிய அட்டவணையின்படி, பதுக்கா பகுதியில் ஏப்ரல் 2ஆம் திகதி இரவு முதல் இன்று ஏப்ரல் 3ஆம் திகதி இரவு 8 மணி வரை நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

ஹோமகம பகுதியில் இன்று (ஏப்ரல் 3) இரவு 8 மணி முதல் நாளை ஏப்ரல் 4ஆம் திகதி இரவு 8 மணி வரை நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பெலவத்தை பகுதியில் ஏப்ரல் 4ஆம் திகதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 5ஆம் திகதி இரவு 8 மணி வரை 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் இல்லாத நாட்களில் பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் மூலம் நீர் வழங்கலை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டுமொரு சுழற்சி முறையில், பதுக்கா பகுதியில் ஏப்ரல் 7ஆம் திகதியும், ஹோமகமவில் ஏப்ரல் 8ஆம் திகதியும், பெலவத்தையில் ஏப்ரல் 9ஆம் திகதியும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், விநியோகம் செய்யப்படும் நேரங்களில் போதியளவு நீரைச் சேமித்து வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை