கொத்தமல்லியில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா?
சமையலில் மணம் மற்றும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் (Coriander) விட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதன் அசாத்திய மருத்துவ குணங்கள் இதோ:
கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால், இது உயர் இரத்த அழுத்தத்தைக் (High Blood Pressure) குறைக்க உதவுகிறது. மேலும், இரத்தக் குழாய்களைச் சுத்தப்படுத்தி, இரத்தத்தில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது.
வயிற்று வலி, அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்து கல்லீரலை பலப்படுத்துகிறது. கொத்தமல்லி விதைகளை (தனியா) தேநீராக்கிக் குடிப்பதால் வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் நீங்குவதோடு, உடலில் தேங்கும் தேவையற்ற நீர் வெளியேறி கை, கால் வீக்கங்கள் குறையும்.
இது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளைச் சீராக இயங்கச் செய்கிறது. மாதவிடாய் ஒழுங்கின்மை (Irregular Periods) மற்றும் மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், தினமும் கொத்தமல்லி ஜூஸ் குடிப்பது மிகச்சிறந்த பலனைத் தரும்.
கொத்தமல்லியை அரைத்துக் கண்களின் மேல் பற்றுப் போடுவதால் கண் கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி கண்கள் பிரகாசமாகும். அதேபோல், இதனை முகத்தில் பூசி வர தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும்.




