குணப்படுத்த முடியாத நோயால் பிரபல நடிகர் உயிரிழப்பு… திரையுலகை உலுக்கிய சோகம்
கன்னட சின்னத்திரை உலகின் பிரபல நடிகரும் தொகுப்பாளருமான படுகௌடா பத்மநாப கே.எம். உடல்நலக் குறைவு காரணமாக 44 வயதில் காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாடலாக தனது பயணத்தை தொடங்கிய படுகௌடா, பின்னர் பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். நடிகராக மட்டுமல்லாமல், பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.
திருமணமான அவர், தனது மனைவி மற்றும் மகளுடன் பெங்களூருவின் யெலஹங்கா பகுதியில் வசித்து வந்தார்.
அண்மையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் குணப்படுத்த முடியாத மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாலும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையும் பலனளிக்காத நிலையில், அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





