இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி நேற்று நள்ளிரவில் இருந்து குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டு வந்த விசேட பண்ட தீர்வை, கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய நிதி அமைச்சரின் அங்கீகாரத்துடன் சந்தையில் தற்போதைய விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புத்தாண்டில், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலைகள் சற்று குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.