டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி விகாரையில் நேற்று (27) இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.