Welcome to Jettamil

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விஷேட அறிவிப்பு  

Share

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டும், தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விரைந்து செல்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், விநியோகம் வழமைபோல் தொடரும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை