நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்
நள்ளிரவு முதல், எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லங்கா சூப்பர் டீசலின் விலை 18 ரூபா அதிகரித்து 331 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மற்ற எரிபொருட்களின் விலைகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என பெட்ரொலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும், மாதாந்த எரிபொருள் திருத்தம் தொடர்பாக, சினோபெக் எரிபொருளின் விலைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சுப்பர் டீசலின் விலை 313 ரூபாயில் இருந்து 331 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.