கனடாவின் ரொறன்ரோவில் காச நோயாளர்கள் அதிகரிப்பு!
2024 ஆம் ஆண்டில் காச நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது, இதனால் பொதுச் சுகாதார சவால்கள் உருவாகியுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு பிறகு, இந்த நோய் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டில் 375 பேருக்கு காச நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்று ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. காச நோய் ஆபத்தானதாக இருக்கும் என்றாலும், இது தடுக்கப்படக்கூடியது என்றும் மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
பழங்குடியின சமூகத்தினர் அதிகம் வாழும் நாடுகளில் காச நோய் பரவலாகக் காணப்படுகிறது, அதனால் இத்தகைய நாடுகளில் இருந்து செல்லும் பயணிகள் இந்த நோயின் தொற்றுக்குள்ளாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.