கிளிநொச்சி மாவட்டத்தில் 28,400 ஏக்கர் நிலப் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நோய் தாக்கங்கள் அதிக அளவில் உணரப்பட்டிருப்பதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஜெகதீஸ்வரி சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்தந்த பகுதி விவசாய போதனாசிரியர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றவாறு உரிய நாசினிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.