அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு திறைசேரியால் வழங்கும் நிதியை குறைப்பு செய்தே அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினால் அடுத்த வருடம் மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டு கட்டணம் அதிகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.