அனுமன் ஜெயந்தி வழிபாடு!
அஞ்சனையின் மைந்தன், வாயு புத்திரன் என்ற போற்றலுக்குரிய அனுமன், வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். அவருடைய பிறந்த நாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
அனுமன் மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் பிறந்தார், இது மிகவும் விசேடமான அம்சமாகும். 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் அனுமன் ஜெயந்தி வந்திருந்தது, இப்போது ஆண்டின் கடைசியில் மீண்டும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது.
2024 ஆம் ஆண்டின் அனுமன் ஜெயந்தி:
இந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி அனுமன் ஜெயந்தி கடைசியாக வந்துள்ளது.
அந்த நாளில், அதிகாலை 04.44 மணிக்கு அமாவாசை திதி துவங்கி, டிசம்பர் 31 ஆம் திகதி அதிகாலை 05.03 வரை அமாவாசை திதி நிலவுகிறது.
மேலும், டிசம்பர் 30 ஆம் திகதி அதிகாலை 12.19 மணிக்கு மூல நட்சத்திரம் துவங்கி, டிசம்பர் 31 ஆம் திகதி அதிகாலை 01.12 வரை நிலவுகிறது.
அமாவாசை மற்றும் மூல நட்சத்திரம் இரண்டும் ஒரே நாளில் இணையும் காரணத்தினால், இந்த நாள் அனுமன் ஜெயந்தி வழிபாட்டிற்கு சிறந்ததாக அமையும்.
அனுமன் ஜெயந்தி வழிபாடு
அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால், சிவனையும் பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இந்த வழிபாடு துன்பங்கள் மற்றும் தொல்லைகளை நீக்கி, நன்மைகளை கொடுக்கும் என கருதப்படுகிறது.
அனுமன் பூஜை செய்வது எப்படி?
அனுமனை வழிபாட்டுக்கு ராமர் அல்லது அனுமன் கோயிலுக்கு சென்று, அஞ்சலியுடன் துளசி மாலைச் சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப் பொருட்கள் பிடிக்கும், அதனால் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக அர்ப்பணிக்கலாம்.
வீட்டில் பூஜை செய்யும் வழி:
சில பக்தர்கள் வீட்டிலேயே பூஜை செய்து பிராத்தனைகளை செய்வார்கள். இதில் இனிப்புகள், பழங்கள் மற்றும் மெது வடை போன்றவை படைக்கப்படுகின்றன. அனுமனுக்கு ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் அனுமன் சாலிசா பாடினால் சிறப்பு அமையும்.
அனுமன் பூஜையில் வெற்றிலை மாலை:
அனுமனுக்கு வெற்றில மாலை சாற்றினால், தடைகள் நீங்கி, கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டுவதன் மூலம் அனைத்து செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.
அனுமன் ஜெயந்தி வழிபாடு, பக்தர்களுக்கு பரிசுகளையும், நன்மைகளையும் கொடுக்கும் என நம்பப்படுகிறது.